
1937 வருடத்திய இந்திய ரூபாய் நோட்டுINR இது இருந்தா அந்த காலத்துல மாவட்ட அளவில் பெரிய பணக்காரன், இன்று இந்த காசுக்கு ஒரு தேங்காய் வாங்க முடியாது தண்ணீர் 20 ரூபாய் ஆனால் அன்று ஏக்கர் நிலம் ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் என்பது ஐந்து பணம் அதாவது இந்த காசுக்கு அப்போது ஐந்து ஏக்கர் ஆனால் அன்றைய தங்க விலை இதை விடவும் குறைச்சல் இன்னும் நிறைய ஊர்களில் ஒரு ரூபாய் பணத்துக்காடு எழுரூபாய்க்காடு கோவணக்காசுக்காடு ஆட்டுபட்டிக்காடு காளைமாட்டுக்காடு என்று பண்டம் மாற்றி வாங்கிய சொத்துக்களும் உண்டு அந்தக்காலத்தில் இது இருந்த ஒரு சின்ன திரு விழாவே நடத்துவார்கள் பெரும்பாலும் எண்ணிக்கையில் ஒரு இந்திய முழுவதும் ஒரு பத்தாயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்திருக்கலாம் ஐந்து ரூபாய் கண்ணில் கண்டு மயக்கம் போட்டு விழுந்தவர்களும் உண்டு மச்சி வீட்டுக்காரன் பச்சை நோட்டு வைச்சிருக்கானாம் எப்படி இருக்கும் யோசிச்சவங்க ஏங்கினவங்க நிறையபேர்
No comments:
Post a Comment