LOGO

LOGO

Saturday, December 16, 2017

GET SET GO


 2000 ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பருவ கால இடப்பெயர்வைக் கண்டறிந்தார்.பறவைகள் தங்களது இடம்பெயர்ச்சிக்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன் இரு அச்சு வான் பயணமுறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன .வானத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் இடம்பெயரும் பறவைகள், அவை செல்ல வேண்டிய இடத்தில் தீர்க்கரேகையை அறிந்து இடம் பெயருகின்றன என்பர். ஆனால் இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. பல வகையான தரைப் புலம்பெயர் பறவைகள் மிக நீண்ட தூரங்கள் இடம் பெயருகின்றன.  பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசை போதல் எனப்படும். வலசை போகும் பறவைகள்குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன.புலப்பெயர்வுக்கு முந்திய காலப்பகுதியில், பல பறவைகளில் அதிகரித்த செயற்பாடுகள் அல்லது புலப்பெயர்வு அமைதியின்மை காணப்படுகின்றது பறவைகள், காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன.புலம்பெயரும் பறவைகள் இதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன.அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது. இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன.இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக்கொண்டு வசந்த காலத்திலும் இடப்பெயர்வு கால, நேர, இட அடிப்படையில் அமையும் பறவைகளின் வான் பயண உத்திகள், வயதான பறவைகளுக்கு அதிகமாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment