தீயிற்கு துணை இல்லாவிடில் எரிவதில்லை
நீருக்கு துணை இல்லாவிடில் நிறுத்தம் இல்லை
காற்றிற்க்கோ கட்டுபாடில்லை
ஆகாயம் எல்லை என்பது காட்டவில்லை
மண் மட்டுமே உன்னை உருவம் ஆக்கி
உன்னை உண்கிறது சவம் ஆனபின்பு
ஆனாலும் வின்சென்றுவிட்டாய் என்கிறார்களே
எதுவடா உண்மை மானிடா
By Mark J Sebastian (Abstract (#41269)) [CC BY-SA 2.0], via Wikimedia Commons
யோசித்தாலும் விடை ஒன்றிலிருந்து மற்றொன்று
அதுவிருந்து இன்னொன்று
ஆயினும் அழிவில்லை
ஆக்கமே என்றால் எல்லாம் ஆக்கமே
அழிவென்றால் எல்லாமும் அழிவே
சக்தி மாறுகிறது
ஆக்கமும் அழிவும்
வருகிறது போகிறது
அது ஒரு மாயை
இல்லாமையை இருந்து இருப்பதும்
இருப்பதில் இருந்து இல்லாமையும்
நன்மையும் தீமையும்
ஒன்றின் நன்மை மற்றொன்றின் தீமை
நீருக்கு துணை இல்லாவிடில் நிறுத்தம் இல்லை
காற்றிற்க்கோ கட்டுபாடில்லை
ஆகாயம் எல்லை என்பது காட்டவில்லை
மண் மட்டுமே உன்னை உருவம் ஆக்கி
உன்னை உண்கிறது சவம் ஆனபின்பு
ஆனாலும் வின்சென்றுவிட்டாய் என்கிறார்களே
எதுவடா உண்மை மானிடா
யோசித்தாலும் விடை ஒன்றிலிருந்து மற்றொன்று
அதுவிருந்து இன்னொன்று
ஆயினும் அழிவில்லை
ஆக்கமே என்றால் எல்லாம் ஆக்கமே
அழிவென்றால் எல்லாமும் அழிவே
சக்தி மாறுகிறது
ஆக்கமும் அழிவும்
வருகிறது போகிறது
அது ஒரு மாயை
இல்லாமையை இருந்து இருப்பதும்
இருப்பதில் இருந்து இல்லாமையும்
நன்மையும் தீமையும்
ஒன்றின் நன்மை மற்றொன்றின் தீமை
அதன் தீமை இன்னொன்றின் நன்மை
ஆகவே ஆராய்ந்தால் குழம்புவாய்
அன்றன்று எதுவொன்று நன்மையோ
அது நின்று மனமாளும் மகிழ்வோ
அதையே செய்
வந்த தூரமும் செல்லும் தூரமும் கணக்கிட்டால்
அவ்விடமே மாண்டுவிடும் ஆபத்து
சுழலில் சிக்கிய காத்தாடி கிழிந்து ஒழிந்து போகும்
நகர்ந்தே இரு ஓர் கடமை உணர்வுடன்
பல்சென்று ஒன்று தானாய் வரும் போகும்
எதிர்பாராதே எதுவும் இல்லை எல்லாமே மாயை
No comments:
Post a Comment