காதல் காதல் காதல் காதல் போயின் ----?
உருண்டோடும் திராட்சைகள் நாவிற்கு எட்டுகிறது
காதலனுக்கு ?!!
கண்கள்!!
ஆனால் உண்ணமுடியவில்லை
சிறைவைத்திருக்கும்
இமைக்காவலன்
பட்டென்று சாற்றிக் கொள்கிறான்
லேசான செம்மை
தேசிய நெடுஞ்சாலை பிரிவுகள்
கண்கள்
வெள்ளிமேகங்களுக்குள் கரு நிலா
கண்கள்
இமைக்காவலனுக்கு மென்மையாய்
ஆதார அட்டை உதட்டின் உரசல் பதிவு
தலைமை செயலுக்குள் பூகம்பம்
மூளையின் மையப்பகுதி
பரவசம் தடுமாற்றம்
ஹார்மோன் ஆறுகளில் ஊற்றெடுத்து
4 ஒளிக்கற்றைக்காட்டிலும் வேகம்
கைகால்களில் மாநில நரம்பு எல்லைகள்
பிரிவு தாண்டிய தேசிய ஒருமை சங்கம நதியிணைப்பு
எப்படிச் சிவந்தாள் என்பதற்குள்
வெட்கித்துக் கதிரவன் மறைந்தே போனான்
தேர்தலில் வென்றாள்
லேசாய் புன்னகைத்து எனக்குள் சிரித்தேன்
ஏன் என்பது போலப் பார்க்கிறாள்
இரட்டை வானவில்லை ஒருங்காய் சுருக்கி
ஒன்றுமில்லை என்றேன் மனதுள்
நான் வெல்ல நீங்கள்தான் காரணம் என்று
ஓர் காந்த ஊடுருவல்கள் உள்ளே சொன்னாள்
அருகிலுணர்தல் அற்புதம்
பேசவே இல்லை விரதம் இருவரும்
ஆனாலும் காதல் ஆண்ட்ராய்டு இயக்கமென்பொருள்
உ ணர்த்துகிறது தொடு சமிங்கை சலனங்களில் மென்மை குளுமை வழவழப்பு
தொழில்நுட்ப வளர்ச்சியில் அழகுசாதனங்கள்
ஆகா பேரின்பம்
அணைக்கும் ரோபோக்கள் இணைந்தன
காதல் சமூக ஊடகங்களில்
விளம்பர பிரிவுக்கு வெகுவருமானம்
காதல் வியாபாரத்தின் அடிப்படை
விமலாதித்தன் ராஜா
No comments:
Post a Comment